வேணாம் இதோட நிறுத்திக்கோ… நான் பல ரவுடிகளை பார்த்தவன்… நீ ஒரு அடி அடிச்சா நான் இரண்டு அடியா திருப்பி கொடுபேன் … திருமாவுக்கு அண்ணாமலை பதிலடி.!

சாலையில் செல்பவர்கள் மீது இடிப்பது, கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றை விடுத்து திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக விமர்சித்து பேசினார். அண்ணாமலை கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞரின் ஸ்கூட்டர் மீது திருமாவளவனின் கார் மோதியது அனைத்து வீடியோகளிலும் தெளிவாக தெரிகிறது. ஆனால் கார் இடித்ததை நிரூபித்தால் மன்னிப்பு கேட்கிறேன் என திருமா சொல்கிறார்.

மேலும் ஏன் இடித்தீர்கள் என கேள்வி எழுப்பிய நபரை திருமா முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தி, அவரது வாகனத்தையும் சேதப்படுத்துகின்றனர். இதையெல்லாம் மறைத்துவிட்டு திருமா முதல்வரை சந்திக்கிறார். இவர்களை காப்பாற்றிக் கொள்ள தான் ஆட்சியே நடைபெறுகிறது. சாலையில் செல்லும் சாதாரண மனிதன் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றால் அதையும் கொச்சை படுத்துகிறீர்கள். இதற்காக குரல் கொடுத்தால் என்னை மிரட்டுகிறீர்கள்.

அண்ணாமலை தான் இதன் பின்னணியில் இருப்பதாக சொல்கிறார். நான் சாமானிய மனிதனுக்காக குரல் கொடுத்தேன். என்னைப் போன்று அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்டால் அடிப்பது, மிரட்டுவது இது என்ன மாதிரியான அரசியல்..? இவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும்? வன்முறை, வெறுப்பு அரசியல், மிரட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு திருமா நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும்.

ஒரு அடி அடித்தால் இரண்டு அடியாக திருப்பி கொடுப்பவன் அண்ணாமலை. இதுபோன்ற உருட்டல், மிரட்டல்களையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். அப்படி தான் நடந்துகொள்வேன் என்றாலும், அதற்கும் நான் தயார் தான். காவல்துறை அதிகாரியாக இருந்து பல ரௌடிகளை கையாண்டவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.