கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்உத்தரவின் பேரில் மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது . அப்போது கடைவீதி போலீசார் கெம்பட்டி காலனி பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன் (வயது 28) கைது செய்யப்பட்டார். செல்வபுரம்’ பேரூர் பைபாஸ் ரோட்டில் கஞ்சா விற்றதாக முத்துப்பாண்டி (வயது 27 ) உக்கடம் குரு பாலாஜி ( வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. குனியமுத்தூர் போலீசார் அங்குள்ள பேரூர் ரோட்டில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நடத்திய சோதனையில் கரூர் இ.பி.காலனியை சேர்ந்த முத்தையா ( வயது 23) மோகன கிருஷ்ணன் (வயது 26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது . சுந்தராபுரம் போலீசார் பிள்ளையார்புரம் நாகராஜபுரம் சந்திப்பில் கஞ்சா விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த அபித் ( வயது 24) என்பவரை கைது செய்தனர். 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது .கரும்புக்கடை போலீசார் புட்டு விக்கி ரோட்டில் நடத்திய சோதனையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பாலாஜி ,விழுப்புரம் மாவட்டம் தவசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். இவர்களிடமிருந்து 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசார் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகர் பகுதியில் நடத்திய சோதனையில் செட்டிபாளையம் ரோட்டைச் சேர்ந்த சுலைமான் ( வயது 44) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 1,100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
ஒரே நாளில் கஞ்சா வேட்டையில் 14 பேர் கைது.!!
