கோவை ஆவராம்பாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 69 ) இவர் அந்த பகுதியில் பேக்கிரி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் பேக்கிரியை காலி செய்யுமாறு கூறினார். இதனால் மனமுடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி சுனிதா பீளமேடு போலீசில் புகார் செய்தார் சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
பேக்கிரியை காலி செய்ய உரிமையாளர் சொன்னதால் வியாபாரி தற்கொலை..
