கோவை மாவட்டம் சூலூர் போலீசார் கடந்த 11-11- 2021 அன்று சூலூர் ஜி. கே எஸ். நகரில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர் . அப்போது அவரிடம் உயர் ரக போதை பொருளான ” மெத்த பெட்டமின் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் சூடான் நாட்டைச் சேர்ந்த அல்போரா அலி முகமது (வயது 25) என்பது தெரிய வந்தது . அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்ததும், விசா காலம் முடிந்தும் அவர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 4- வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி விக்னேஷ் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர் அல்போரா அலி முகம்மதுவுக்கு 1 மாத சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜர் ஆனார்.
உயர்ரக போதை பொருள் விற்பனை – சூடான் மாணவருக்கு சிறை தண்டனை.!!
