கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுன்ஸ் வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்த மேம்பாலதிட்ட பணிகள்அ.தி.மு.க. ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.திமுக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாலம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவினர் ஏராளமானவர்கள் திரண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும்,முறையான அனுமதி பெறாததாலும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டஅதிமுகவினர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை புதிய மேம்பாலத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி, எம். எல்.ஏக்கள் மீது வழக்கு..!
