கரூர் சம்பவம்… உண்மையில் நடந்தது என்ன..? NDA எம்.பி.,க்கள் குழு அறிக்கை சமர்ப்பிப்பு..!!

ரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது.

கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் முழுமையான நிர்வாகத் தவறுதான் கரூர் பரப்புரை கூட்டத்தில் உயிரிழப்புகளுக்கு காரணம் என தேசிய ஜனநாயகியின் கட்சியின் முன்னேறியும் குழு தெரிவித்துள்ளது. நிர்வாக அலட்சியத்தால் இந்த உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் 2000 முதல் 3000 பேர் மட்டுமே கூட முடியும் இடத்தில் 30 ஆயிரம் பேர் வரை அனுமதித்தது நிர்வாகத்தின் தவறு என்ற குற்றச்சாட்டை அந்த அறிக்கையில் அவர்கள் முன் வைத்துள்ளார்கள்.

இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறுகிய இடத்தில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் வழங்கியது நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுகிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது கூட்டத்தில் மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிலர் அந்த பகுதிகளில் திறந்த நீ வெளி கழிவுநீர் தொட்டிகளில் விழுந்து பிறகு உயிரிழந்தார்கள் என்றும், நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் அந்த குழு வழங்கி உள்ளது.

அதேசமயம் எம்பிகள் குழு கரூருக்கு வருகை தந்த போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் தங்களை சந்திக்க மறுத்துவிட்டார்கள் என்றும் அந்த குழு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளது. அரசு அதிகாரிகளின் தவறுகளின் காரணமாக கூட்ட மேலாண்மை இன்றி இருந்தது சம்பவத்திற்கு முக்கிய காரணம். மாவட்ட நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை. சிபிஐ விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையும் கோரியுள்ளது.

எம்.பி.,யான ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியின் எம்பிக்கள் கொண்ட உண்மை அறியும் குழு கரூர் சென்று விசாரணை நடத்தி விட்டு டெல்லி திரும்பிய அந்த குழு நேற்று இரவு இந்த அறிக்கை ஜேபி நட்டாவிடம் சமர்ப்பித்தது.