கோவை : காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் ,2 ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தடை உத்தரவை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் ( கடை எண் 1663) பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றதாக காரைக்குடி சீனிவாசன் நகரை சேர்ந்த கார்த்திக் ( வயது 22 )சரவணன் ( வயது 35, )பிரகாஷ் ( வயது 38) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 140 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரு 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 கைப்பற்றப்பட்டது.
இதே போலபீளமேடு போலீசார் ஆவாராம்பாளையம், டாஸ்மாக் கடை பகுதியில் பதுக்கி வைத்து மது விற்றதாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சின்னு ( வயது 47) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 20 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் துடியலூர் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள (கடை எண் 1618 ) அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 28) என்பவரை கைது செய்தனர் .இவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள். கைப்பற்றப்பட்டது..