கரூர் சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன்- புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குபதிவு..!

ரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது.

தமிழக அரசின் உத்​தரவை தொடர்ந்​து, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஆணை​யம் கரூரில் நேற்று விசா​ரணையை தொடங்​கியது.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலை​வர் விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசல் ஏற்பட்டதில் பலர் அடுத்​தடுத்து மயங்கி விழுந்​தனர்.

அங்​கிருந்து மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் என 100-க்​கும் மேற்​பட்​டோர், 6 கி.மீ தொலை​வில் உள்ள கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதில் 9 குழந்​தைகள், 17 பெண்​கள், 14 ஆண்​கள் என 40 பேர் உயி​ரிழந்​தனர். இச்​சம்​பவம் பெரும் அதிர்ச்​சி​யை​யும், சோகத்​தை​யும் ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், அனை​வரது உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு நேற்று உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. காயமடைந்த 50-க்​கும் மேற்​பட்​டோர் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் சிலரது உடல்​நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது. இதற்​கிடையே, இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் ஒருநபர் விசா​ரணை ஆணை​யம் அமைத்து முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், நேற்று கரூர் வந்​தடைந்த நீதிபதி அருணா ஜெகதீசன், நெரிசல் சம்​பவம் நடந்த வேலு​சாமிபுரத்​தில் ஆய்வு செய்​தார். காவல் துறை​யினரிட​மும், அப்​பகுதி மக்​களிட​மும் சம்​பவம் குறித்து கேட்​டறிந்​தார். அங்கு நடந்த நிகழ்​வு​களை காவலர்​கள், பொது​மக்​கள் அவரிடம் விளக்​க​மாக எடுத்​துரைத்​தனர். அப்​போது சிலர் நீதிப​தி​யிடம், ”ஒருசிலரிடம் மட்​டும் விசா​ரணை மேற்​கொள்​ளாமல், அனைத்து தரப்​பினரிட​மும் விசா​ரிக்க வேண்​டும். விஜய் பேச வந்​த​போது மின்​சா​ரம் திடீரென தடைபட்​டது, ஒலிபெருக்கி வேலை செய்​யாதது உட்பட அனைத்து விஷ​யங்​கள் குறித்​தும் முறை​யாக விசா​ரணை மேற்​கொள்ள வேண்​டும்” என வேண்​டு​கோள் விடுத்​தனர்.

அதற்கு அவர், ”சம்​பவம் தொடர்​பான அனைத்து நிகழ்​வு​கள் குறித்​தும், அனைத்து தரப்​பினரை​யும் சந்​தித்து விசா​ரணை நடத்​து​வேன்” என்று உறு​தி​யளித்​தார். பின்​னர், கரூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​பவர்​களை சந்​தித்து விசா​ரித்​தார். அப்​போது பலர் கதறி அழுத​படி சம்​பவம் குறித்து அவரிடம் விவரித்தனர். இதற்கிடையே, கரூரில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்பு தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்குமாறு அரசிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார்.

பிரச்​சா​ரக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்த தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், துணை செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகிய 3 பேர் மீது பிஎன்​எஸ் பிரிவு 105 (கொலைக்கு சமமல்​லாத குற்​றமற்ற கொலை), பிரிவு 110 (குற்​றமற்ற கொலை செய்ய முயற்​சி), பிரிவு 125 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்​படுத்​துதல், அவசரம் அல்​லது அலட்​சிய செயல்​கள்), பிரிவு 223 (பொது அதி​காரி​யின் உத்​தர​வுக்கு கீழ்ப்​படி​யாமை, பொதுச் சொத்​துக்கு சேதம் விளை​வித்​தல்) உட்பட 5 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் நேற்று வழக்கு பதிவு செய்​துள்​ளனர். மதி​யழகன் தலைமறை​வான​தாக கூறப்​படு​கிறது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.