குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவர் கைது..!

கோவை டாட்டா பாத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 49)இவரது மனைவி பிரியா (வயது 46) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவரது மனைவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்த நிலையில் கணவர் மீது கடந்த ஆண்டு காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கணவர் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர் .பிறகு அவர் ஜாமினில் வந்தார் .இந்த நிலையில் மனைவி பிரியா தனது தாயாருடன்,அப்பார்ட்மெண்டில் வீட்டில் வசித்து வந்தார். சுரேஷ் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று பிரியா வாழும் அப்பார்ட்மெண்டுக்கு சுரேஷ் வந்தார். செக்யூரிட்டி மூலம் பிரியாவை கீழே வரச் சொன்னார்.. பின்னர் அவரிடம் தகராறு செய்து தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கி, காலால் மிதித்தார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது .இது குறித்து பிரியா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட கணவர் சுரேசை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.