சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
திருவாரூர் பயணத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி உடன் விஜய் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலிருந்தும் எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் அத்தகைய போன் கால் உரையாடல் நடந்திருக்கலாம் என்றும், அதற்கு முக்கியமான அரசியல் தாக்கங்கள் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
விஜய் தனது கட்சியின் வியூகம் மற்றும் அடுத்த தேர்தல்களில் ஏற்படக்கூடிய கூட்டணிகள் பற்றி மௌனம் காத்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு அவர் தொலைபேசியில் அழைத்தது அரசியல் யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். அவரின் இந்த செயல் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும்.விஜய்யும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும். எங்களது பொதுவான கருத்து என்னவென்றால், இந்த கட்சி அந்தக் கட்சி என்றில்லை, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நினைக்கும் யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. உரிய நேரத்தில் கூட்டணி குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்.
எடப்பாடி இப்படி அழைப்பதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு போதிய பலம் இப்போது இல்லை என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அதிமுக கூட்டணி வெற்றிக்கூட்டணி இல்லை. அதிலும் இப்போது அந்த கூட்டணியில் தேமுதிக இல்லை. பாமக இல்லை. பாமக விஜய் பக்கம் போனாலும் வியப்பு இல்லை. இப்படி இருக்க பழைய வாக்கு வங்கியை தக்க வைப்பதே வியப்பான விஷயம்தான் . அதுவே கடினமான விஷயம்தான். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார். பாஜக உடன் வலுவான கூட்டணி அமைத்தும் கூட அவர் அடுத்தடுத்து முக்கியமான கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சமீபத்தில் விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு இவர்கள் இருவரும் போனில் பேசியதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி உடன் அரசியல், கூட்டணி தொடர்பான உரையாடலுக்காக அவரை விஜய் தொடர்புகொண்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் தமிழகத்தில் மாறிவரும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். திமுகவிற்கு எதிராக எடப்பாடி – விஜய் கைகோர்க்கும் விதமாக இந்த போன் கால் அமைந்ததா என்ற கேள்வி எழுந்தது.
தமிழ்நாட்டில் இன்னமும் திமுகவிற்கு சாதகமான சூழல்தான் உள்ளது. ஆளும் திமுகதான் வெற்றிக்கு அருகில் உள்ளது. அதை தடுக்கும் விதமாக அதிமுக உடனான கூட்டணி குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.