கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 51) தொழிலதிபர். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து வீடு திரும்பி ஆனந்த ராஜ் கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ,உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்து நகைகள் கொள்ளையடிக்கபட்டிருந்தன. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னக்காமண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பீரோவில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது யாரையும் பிடிக்கவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்கை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை.!!







