கோவை இடையர் வீதி, செல்ல பிள்ளை சந்தில் வசிப்பவர் சஞ்சய் மித்யா (வயது 37) இவர் தெலுங்கு வீதி – தாமஸ் வீதி சந்திப்பில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை . இது குறித்து வெரட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரும், 25 வயது மதிக்க ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை தேடி வருகிறார்கள்.
நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகள் மாயம்..!
