மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு..!

கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு அவரது பாட்டி ரங்கநாயகி வெளியே சென்று பார்த்தார். அங்கு பைக்கில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று மூதாட்டி ரங்கநாயகி கழுத்தில் கடந்த 4 பவுன் செயினை பறித்துவிட்டு மற்றொரு ஆசாமியுடன் பைக்கில் தப்பி சென்று விட்டான். இது குறித்து நித்தின் நாராயணா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து 2 ஆசாமிகளை தேடி வருகிறார்.