7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை.!!

கோவை கணபதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 69 வயது முதியவரை கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் , ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது..