கோவை உக்கடம் ,புல்லுக்காடு பகுதயை சேர்ந்தவர் சாந்தி ( வயது 55 )ஜி. எம். நகரில் உள்ள ஒரு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் காய்கறி வாங்க கடைவீதிக்கு வந்தார். பின்னர் அவர் காய்கறி வாங்கிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார் .உக்கடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வின்சென்ட் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் சாந்தியை பார்த்து திட்டினார். இதனால் அவர் அந்த நபரிடம் ஏன்? என்னை திட்டுகிறாய். என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் சாந்தி அங்கிருந்து நடந்து சென்றார். அதன்பிறகு அந்த நபர் சாந்தியின் பின்னால் நடந்த சென்று அவரை மேலும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அவர் அந்த நபரை எச்சரித்துடன் இனிமேல் திட்டக்கூடாது என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்த நபர் சாந்தியை தாக்க வந்துள்ளார். அதற்கு அவரும் பதிலுக்கு அந்த நபரை தாக்க முயன்றதாக தெரிகிறது .இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கு கிடந்த கல்லை எடுத்து சாந்தியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே அக்கம் பக்கம்உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவர் வீடு திரும்பினார் .இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டது .அவரை வீட்டில் உள்ளவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தாலும் சிகிச்சை பலனளிக்காமல் சாந்தி இறந்தார். இது குறித்து உக்கடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை தேடி வந்தனர்.நேற்று அந்த ஆசாமி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் அவிநாசி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பது தெரியவந்தது.இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். |
சத்துணவு அமைப்பாளரை கல்லால் அடித்து கொலை செய்தவர் கைது..!
