ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ரேஷன் கடையின் ஜன்னல்களை உடைத்து சூறையாடியது. பின்னர் ரேஷன் கடைக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த அரிசி ,பருப்பு மூட்டைகளை தின்றது ,தொடர்ந்து அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த யானை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி சேதப்படுத்தியது வீட்டில் இருந்தவர்கள் உள்ளே ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினர்..