கோவை ராஜவீதியில் நகைக்கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்ம ராஜா ( வயது 46 ) இவரது கடையில் கெம்பட்டி காலனி பாளையந்தோட்டத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மனோகரன் என்பவர் 10 நாட்களில் நகை செய்து கொடுப்பதாக 142 பவுன் தங்கம் வாங்கினாராம். அந்த தங்கத்தை நகை செய்து கொடுக்காமல் மனோகரன் மோசடி செய்து விட்டார் . இது குறித்து நகைக் கடை அதிபர் லட்சுமி நரசிம்ம ராஜா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.. போலீசார் மனோகரன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
142 பவுன் தங்கம் மோசடி- நகைத் தொழிலாளி தலைமறைவு..!
