தனியாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியையிடம் அன்பு காட்டி 57 பவுன் நகை, ரூ.20 லட்சம் மோசடி செய்த பலே கில்லாடி வாலிபர்.!!

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயது அரசு பள்ளி கூட ஆசிரியை. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மகன்கள் இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் ஆசிரியை மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் ஆசிரியைக்கு அறிமுகம் ஆனார். அப்போது ஆசிரியை தனக்கு கழுத்து வலி இருப்பதாக வாலிபருடன் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் மருந்து வாங்கி கொடுத்ததுடன் வலியை குணமாக்குவதாக கூறி கிறிஸ்தவ ஆலயத்திற்கு அழைத்துச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். இதனால் அந்த வாலிபரை நம்பிய ஆசிரியை மகன் போல நடத்தி உள்ளார். இதற்கிடையில் அந்த வாலிபருக்கு கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. பின்னர் அந்த இளம் பெண் அந்த வாலிபரை விட்டு பிரிந்து சென்று விட்டராம்.. இதனால் அந்த வாலிபர் தனது காதலியை வசப்படுத்துவதற்காக மாந்திரீகம் செய்யும் நபர்களை அணுகினார்.. இதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அப்போது அந்த வாலிபர் தனக்கு அறிமுகமான ஆசிரியையிடம் பொய்யான காரணத்தை கூறி 57 பவுன் நகைகளை வாங்கி அடமான வைத்துள்ளார். மேலும் ஆசிரியையின் வருங்கால் வைப்பு நிதியிலிருந்தும் ரூ.20 லட்சம் வரை சுருட்டியுள்ளார். நகைகள் அனைத்தையும் இழந்த ஆசிரியை இதுகுறித்து தனது மகன்களிடம் கூறியுள்ளார் .இதையடுத்து கோவைக்கு வந்த அவரது மகன்கள் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..