மறைந்த விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் நாகையில் கொண்டாடப்பட்டது..!

மறைந்த தே. மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது இதில் ஒரு பகுதியாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப் பூண்டி ஊராட்சி காரைநகர் .காருங்கண்ணி ஊராட்சி மகிழி .கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி காரப்பிடாகை ஆகியபகுத்தியில் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர், இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பூமிநாதன். கீழையூர் ஒன்றிய செயலாளர் வேணுகோபால் ,தமிழ்வாணன் சண்முகசுந்தரம் இளம்பரிதி செந்தில்,விஜயகுமார்,இளையராஜா,தவசுமணி,மணிகண்டன் பாஸ்கர்,பேபி.காரை இளையராஜா,கார்த்தி மாகிழி அன்பு மற்றும் அனைத்து கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..