மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சி – நண்பர் கைது..!

கடலூர் மாவட்ட விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 27) வல்லரசு ( வயது 26),குமார் (வயது 25 )இவர்கள் 3 பேரும் நண்பர்கள் .கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ. 4 வீரபாண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பூக்கடையில் வேலை செய்து வந்தனர். செல்போன் பரிமாற்றம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மாடியில் நின்ற உதயகுமாரை பிடித்து வல்லரசு கீழே தள்ளிவிட்டாராம் .இதில் உதயகுமார் படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து வல்லரசை கைது செய்தார்.