தொழிற்சாலையில் அலுமினிய பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பரிதாப பலி..

கோவை, பீளடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் “மெட்டல் “கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஷாம் சஹானி (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

அவருடன் சந்தோஷ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.. சம்பவத்தன்று இருவரும் தொழிற்சாலையில் உள்ள அலுமினியம் பாய்லர் பகுதியில் நின்று வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த அலுமினியம் பாய்லர் திடீரென்று வெடித்தது. இதில் ராஜேஷ் ஷாம்சஹானி முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அலறி துடித்த அவரை கிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராஜேஷ் சாம் சகானியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்து வந்தனர். ராஜேஷ் சாம் சகானியின் உடலை பார்த்து கதறி அழுதனர் .பிறகு இது குறித்து அவரது தந்தை லால்பா சஹானி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..