கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ், ராஜா ஆகியோருடன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு வரும் வழியில் விற்பனை செய்வதற்காக சீமாறு புல் சேகரித்தனர்.
அந்த சமயம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை அவர்களை துரத்தியது. அப்போது 3 பேர் தப்பித்த நிலையில் காட்டு யானை மருதாச்சலத்தை தாக்கி கொன்று விட்டு அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்த மருதாசலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.