பெய்ஜிங்: டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பால் கோபமான சீனா, அமெரிக்காவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
‘பிரிக்ஸ்’ நாடான பிரேசிலுடன் கைகோர்த்த சீனா ஒரே மூவ் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ரூ.4 லட்சம் கோடிக்கு ‘செக்’ வைத்துள்ளது. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விழி பிதுங்கி உள்ளார். சீனாவும், பிரேசிலும் சேர்ந்து அமெரிக்காவை கதறவிட்டது எப்படி? என்ன நடந்தது? என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் தலைக்கணத்துடன் செயல்பட்டு வருகிறார். வரி, வர்த்தகம் என்ற பெயரில் பல நாடுகளை மிரட்டி வருகிறார். அவ்வப்போது அடாவடியாக நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக ‘பிரிக்ஸ்’ நாடுகளை சீண்டி வருகிறார். அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கொண்டு வரலாம் என்ற பயத்தில் அவர் ‘பிரிக்ஸ்’ நாடுகளை சீண்டி வருகிறார்.
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்று 10 நாடுகள் உள்ளன. இதில் முக்கியமான நாடுகள் என்றால் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் தான். இந்த நாடுகளை டிரம்ப் குறிவைத்துள்ளார்.
சீனாவுக்கு 145 சதவீத வரி போட்டார். இப்போது 30 சதவீத வரி நடைமுறையில் உள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளார். இதில் 25 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரும் 27 ம்தேதி அடுத்தக்கட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டுக்கு டிரம்ப் 50 சதவீத வரியை நடைமுறைப்படுத்திவிட்டார். மேலும் உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது ஏற்கனவே பொருளாதார தடைகள் உள்ளன.
இந்நிலையில் தான் தற்போது ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. இந்தியா – சீனா இடையே இருந்த மோதல் மறைந்து தற்போது சமூகமான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இதன் அடுத்தக்கட்டமாக தான் சீனாவும், பிரேசிலும் சேர்ந்து அமெரிக்காவை கதறவிட்டுள்ளது. அதாவது உலகிலேயே சோயா பீன்ஸ் உற்பத்தியில் முக்கிய நாடுகளாக அமெரிக்காவும் பிரேசிலும் விளங்குகின்றன. இன்னொரு பக்கம் அதிகளவில் சோயா பீன்சை இறக்குமதி செய்யும் நாடு என்றால் சீனா தான்.
சீனா எப்போதுமே அமெரிக்காவிடம் இருந்து தான் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது. சீனாவின் சோயாபீன் இறக்குமதியில் 90 சதவீதம் அமெரிக்க விவசாயிகளின் உற்பத்தியாக இருக்கும். டிரம்ப் முதல் முறை அதிபராக இருந்த காலத்தில் சீனாவை அடிக்கடி வம்புக்கு இழுத்தார். இதனால் அந்த நாட்டிடம் சோயா பீன்ஸ் வாங்குவதை அப்போது சீனா சற்று குறைத்தது.
டிரம்ப் மீண்டும் அதிபரான பிறகு சோயா பீன்ஸ் வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதில் ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடான பிரேசில் பக்கம் சீனா சென்றுள்ளது. கடைசி 7 மாதங்களில் 6 கோடியே 10 லட்சம் டன் சோயா பீன்சை சீனா இறக்குமதி செய்து இருக்கிறது. இதில் வெறும் 25 சதவீதம் மட்டும் தான் அமெரிக்காவில் இருந்து இறங்கியது. 70 சதவீதம் சோயா பீன்ஸ் பிரேசிலில் இருந்து தான் வந்திருக்கிறது.
குறிப்பாக கடந்த ஜூலை மாத சோயா பீன்ஸ் இறக்குமதியில் அமெரிக்காவை மொத்தமாக கழற்றி விட்டு விட்டது சீனா.
அந்த மாதம் மொத்தம் ஒரு கோடியே 16 லட்சம் டன் சோயா பீன்சை சீனா இறக்குமதி செய்தது. இதில் 1 கோடியே 3 லட்சம் டன் பிரேசிலில் இருந்து வாங்கியது. வெறும் 4.2 லட்சம் டன் தான் அமெரிக்காவிடம் இறக்குமதி செய்யப்பட்டது.
அதாவது, 90 சதவீத சோயா பீன்சை பிரேசிலிடம் இருந்தும், வெறும் 4 சதவீத சோயா பீன்சை அமெரிக்காவிடம் இருந்தும் வாங்கி இருக்கிறது சீனா. இந்த ஆண்டு மொத்தம் 16 கோடியே 70 லட்சம் டன் சோயா பீன்சை பிரேசில் உற்பத்தி செய்யக்கூடும்.
இதில் 11 கோடி டன் சீனாவுக்கு போக இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி. இவ்வளவு பணமும் அமெரிக்காவுக்கு போக வேண்டியது. டிரம்ப் காட்டிய அடாவடியால் இப்போது பிரேசிலுக்கு செல்கிறது. இது அமெரிக்காவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அமெரிக்காவின் விவசாயிகள் பெரிதும் பாதிப்பை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர்.
சோயா பீன்ஸ் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு டிரம்புக்கு மனு அளித்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் இன்னும் செவிசாய்க்கவில்லை. வரும் காலத்திலும் சோயா பீன்ஸை பிரேசிலிடம் இருந்து தான் சீனா வாங்கும் என்பதால் டிரம்ப் தற்போது சிக்கலில் மாட்டி உள்ளார். ஏனென்றால் சீனா என்பது சோயா பீன்ஸ்க்கு பெரிய மார்க்கெட். அங்குள்ள மக்கள்தொகை தான் இதற்கு காரணம். இப்போது டிரம்பின் அடாவடியால் சீனாவும், பிரேசிலும் சேர்ந்து அமெரிக்க விவசாயிகளை கதறவிட்டுள்ளனர்.
முன்னதாக பிரேசில் அதிபர் லூலா, நம் பிரதமர் மோடியிடம் பேசினார். பின்னர் சீன அதிபர் ஜின்பிங்கிடம் பேசினார். வர்த்தகத்துக்கு எந்த வகையிலும் அமெரிக்காவை நம்பி இருக்க வேண்டாம். வரக்கூடிய காலத்தில் நாமே நமக்கு தேவையானதை செய்து கொள்வோம் என்று அழைப்பு விடுத்தார். அதோடு விரைவில் இந்தியா வருவதாகவும் லூலா, பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
மறுபுறம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றனர். விரைவில் புதின் இந்தியா வருகிறார். அதேபோல் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி சீனா செல்கிறார். சீனாவில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். அங்கு
இப்படி மோடி, ஜி ஜின்பிங், புதின், லூலா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் ஒன்று கூடி உள்ளது அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏனென்றால்
சோயா பீன்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா வேண்டாம் என்று பிரேசில் பக்கம் சீனா சென்ற ஒரு முடிவு காரணமாக டிரம்புக்கு ஆண்டு தோறும் ரூ.4 லட்சம் கோடி வரை அடி விழும் நிலை வந்துள்ளது.
இப்படி இந்தியா, ரஷ்யா உள்பட பிற பிரேசில் நாடுகள் முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் டிரம்பும், அமெரிக்காவும் நிச்சயம் பெரும் சரிவை எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.