கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இங்கு வடக்கி பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற மாணவர் 11 -ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்புகள் முடிந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக மாணவர்கள் அங்குள்ள கழிப்பிடம் சென்றனர். அப்போது கழிப்பிடம் அருகில் மாணவர்கள் சிறுநீர் கழித்த போது அங்கு புதறுக்குள் இருந்த கிருஷ்ணாவின் வலது காலில் பாதம் அருகில் கடித்து விட்டது.
இதனால் சத்தம் போட்டு கதறிய கிருஷ்ணாவில் அலறல் சத்தத்தை கேட்டு, அங்கு வந்த மாணவர்கள் பாம்பு கடித்ததை பார்த்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இடைத்தொடர்ந்து கிருஷ்ணா சிகிச்சைக்கா பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதற்கிடையே அரசு பள்ளியில் கழிப்பிடம் அருகில் மாணவனுக்கு பாம்பு கடித்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடனடியாக அந்த பகுதியில் உள்ள முள் புதர்களை அகற்றும்படி உத்தரவு போடப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையில் செடிகள் அதிகம் வளர்ந்து அதில் மறைந்திருந்த பாம்பு வெளிப்பட்டு மாணவரை கடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. . இதை தொடர்ந்து செடி கொடிகள் உடனே அகற்றப்பட்டன.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பிடம் மற்றும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 மாணவனை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதி..
