கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையம் , எஸ்.எஸ் எஸ் ,கிரீன் பாரடைஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53)இவர் நேற்று பைக்கில் தனது மகள் ஸ்ரீவித்யா வுடன்( வயது 19) போடி பாளையம் – மலுமிச்சம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் தந்தைஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீவித்யா சிகிச்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி மலர்விழி மதுக்கரை போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லாரி ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம், சின்னையாபுரத்தைச் சேர்ந்தடிரைவர் சந்திரசேகர் (வயது 58) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
பைக் மீது லாரி மோதி விபத்து: தந்தை பரிதாப பலி – மகள் படுகாயம்..
