மளிகை கடையில் குட்கா விற்பனை – வியாபாரி கைது..!

கோவை புதூர் வி.பிளாக், நாகப் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் இளங்கோ (வயது64) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 13 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது,குட் கா விற்ற பணம் ரூ. 17,900 பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த வியாபாரி இளங்கோ ( வயது 64) கைது செய்யப்பட்டார்.. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.