கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்தில் சுற்றி வந்தனர். அப்போது அங்கு கேரளாவுக்கு செல்லும் ரயில் வந்தது. அந்த ரயிலில் ஏறி போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் ஒரு மூட்டை அனாதையாக கிடந்தது .உடனே போலீசார் அந்த மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர். அதற்குள் 2 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அதை கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை ரயில் நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்..!
