பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது, குட்கா விற்றவர் கைது..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண்1701)அருகே உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் -புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன்,சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்ஆகியோர் அங்குதிடீர் சோதனை நடத்தினர்.அப்போது மது பாட்டில்களையும்,புகையிலை பொருட்களையும் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்த 123 மது பாட்டில்களும்,தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம், குடுத்தான் கோட்டையைச் சேர்ந்த பாலு (வயது 50) கைது செய்யப்பட்டார் ..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.