கோவை நாகர்கோவில் திருச்சி – பாலக்காடு ரயில்கள் இன்று முதல் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயில்,பாலக்காடு டவுன் – திருச்சி விரைவு ரயில், நாகர்கோவில் – கோவை விரைவு ரயில் கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் இன்று (திங்கள்) முதல் நின்று செல்லும். இதேபோல கோவை – நாகர்கோவில் ரயில், நாகர்கோவில் – கோவை ரயில், மேலப்பாளையம் ஆரல்வாய்மொழி ஆகிய ரயில் நிலையங்களிலும் இன்று முதல் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இருகூர் சிங்காநல்லூர் ரயில் பயணிகளுக்கு இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது..
பயணிகளுக்கு குட் நியூஸ்… திருச்சி, நாகர்கோவில், விரைவு ரயில்கள் சிங்காநல்லூர், இருகூரில் இன்று முதல் நின்று செல்லும்.!!
