நீலகிரி மாவட்ட அதிமுக உதகை சட்டமன்றத் தொகுதிக்கு புதியதாக நியமனம் செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை நீலகிரி மாவட்ட அதிமுக கழக செயலாளர் கப்பச்சி வினோத் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.

உதகை ஜூன் 5 நீலகிரி மாவட்டம் உதகை அ.இ. அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி D.வினோத் உதகை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் பூத் எண் 117,123,124,127,159 ஆகிய 5 பூத்துகளில் நேரடியாக சென்று புதிதாக நியமனம் செய்யப்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் அனைவரையும் சந்தித்து அவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார், உடன் கோவை மண்டல துணை தலைவர் சதீஷ் போஜன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேஷ் அமைப்புசார ஓட்டுனர் அணி மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் அம்மா பேரவை நகர செயலாளர் ஜெயராமன் மற்றும் வார்டு செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள்
நகர கழக செயலாளர்
க. சண்முகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இந்நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்,