2 வீடுகளில் பூட்டை உடைத்து தங்கநகை – வெள்ளி பொருள் கொள்ளை.

கோவை ஜூன் 4பொள்ளாச்சி,கோட்டூர் பக்கம் உள்ள ரங்க சமுத்திரம்,வி. கே. .வி . இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன் (வயது 49)வியாபாரி .இவர் கடந்த 2-ந் தேதி காலை 11மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றிருந்தார்.மதியம் 1:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து முத்தமிழ்செல்வன் கோட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதே போலநீலாம்பூர் பக்கம் உள்ள முதலிபாளையம், ரங்கா நகரை சேர்ந்தவர் வெம்பான் (வயது 44) கடந்த 20-ஆம் தேதிஇவர் வீட்டை பூட்டி விட்டுகுடும்பத்துடன் திருநெல்வேலி சென்றுவிட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .பீரோவில் இருந்த ஒரு கிராம் தங்க காசு , 2 ஜோடிவெள்ளி கொலுசு,வெள்ளி கொடி ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் இது குறித்து வெம்பான் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். –