சட்டவிரோதமாக வசித்து வரும் வங்கதேசத்தினரை அதிரடியாக வெளியேற்றும் இந்தியா..!

நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன.

அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இதையடுத்து அவர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்தவர்களின் கை, கால்களில் சங்கிலியிட்டு விமானப்படை விமானத்தில் ஏற்றி சொந்த நாடுகளுக்கு அனுப்பினார்.

தற்போது நம் நாடும் அத்தகைய நடவடிக்கையை அதிரடியாக தொடங்கி உள்ளது. இதற்கு கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி மத்திய அரசும், மாநில அரசும் சட்டவிரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றி வருகிறார். சட்டவிரோதமாக நம் நாட்டுக்குள் நுழைந்து வசித்து வந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானவர்களை டெல்லி புறநகரில் கடந்த வாரம் போலீசார் பிடித்தனர். இதையடுத்து 160 வங்கதேசத்தினர் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு நம் நாட்டின் விமானப்படை விமானத்தில் ஏற்றி செல்லப்பட்டனர். இவர்கள் அங்கிருந்து வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.

தற்போது வரை 500க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் நம் நாட்டின் கிழக்கு எல்லை வழியாக வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 14ம் தேதி 140 வங்கதேசத்தினர் ராஜஸ்தானில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அகர்தலா அழைத்து வரப்பட்டு வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு முன்பாக கடந்த 4ம் தேதி 200 பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 300 பேர் குஜராத்தில் இருந்து வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கான வங்கதேச இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் முகமது நசீம் உத் தவுலா கூறுகையில், ”இந்த புஷ் இன்ஸ் நடவடிக்கையை ஏற்க முடியாது. வங்கதேச எல்லை படையினர் தற்போது இந்த விஷயத்தை சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு கையாண்டு வருகிகின்றனர். தேவை என்றால் ராணுவம் தலையீடு செய்யும்” என்றார்.

நம் நாட்டின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் நாட்டினரை வெளியேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை பிடித்து வைக்க தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதோடு, நகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.