திமுகவினர் என்னை கேவலப்படுத்தறாங்க – அரக்கோணம் கல்லூரி மாணவி கண்ணீர் மல்க புகார்.!!

ரக்கோணம்: ​தி​முக​வினர் பொதுக்​கூட்​டம் நடத்தி தன்னை குற்​ற​வாளி​போல் சித்​தரிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி, திமுக முன்​னாள் பிர​முகர் மீது புகார் அளித்த கல்​லூரி மாணவி கண்​ணீர் மல்க வீடியோ வெளி​யிட்​டுள்​ளார்.

ராணிப்​பேட்டை மாவட்​டம் அரக்​கோணம் அடுத்த பருத்​திப் ​புத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் பிரீத்​தி(21), கல்​லூரி மாண​வி. இவர் சமீபத்​தில் தனது கணவரும் மற்​றும் முன்​னாள் திமுக அரக்​கோணம் மத்​திய ஒன்​றிய இளைஞரணி துணை அமைப்​பாளரு​மான தெய்​வச்​செயல்​(40) என்பவர் மீது பாலியல் வன்​கொடுமை உள்​ளிட்ட பல்​வேறு புகார்​கள் தொடர்​பாக அரக்​கோணம் மகளிர் காவல் நிலை​யத்​தில் சமீபத்​தில் புகார் அளித்​தார்.

இந்த புகார் குறித்து காவல் துறை​யினர் முறை​யாக விசா​ரணை செய்​ய​வில்லை என மாணவி தரப்​பில் குற்​றச்​சாட்டு வைக்​கப்​பட்டு வரு​கிறது. மாண​வி​யின் புகாரைத் தொடர்ந்து தெய்​வச்​செயல் பதவி பறிக்​கப்​பட்​டது. இதற்​கிடையே, மாணவிக்கு ஆதர​வாக​வும், திமுக அரசைக் கண்​டித்​தும் அரக்​கோணத்​தில் கடந்த 21-ம் தேதி அதி​முக சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

இதனைத்​ தொடர்ந்​து, மாணவிக்கு எதி​ராக கடந்த சில நாட்​களுக்கு முன்பு அரக்​கோணத்​தில் திமுக சார்​பில் கண்​டனப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இதில், மாநில சுற்​றுச்​சூழல் அணி துணை செய​லா​ளர் வினோத்​காந்தி பங்​கேற்​றுப் பேசும்​போது, பணம் பறிக்​கும் நோக்​கில் மாணவி செயல்​படு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி​னார்.

மேலும், மாவட்ட காவல் துறை​யினர், ‘மாண​வி​யின் குற்​றச்​சாட்டு தொடர்​பாக விசா​ரணை நடத்தி வருகிறோம். அவரின் குற்​றச்​சாட்​டு​களில் பெரும்​பாலானவைக்கு ஆதா​ரம் இல்​லை’ என தெரி​வித்து வருகின்​றனர்.

இதற்​கிடையே, அந்த மாணவி சமூக வலை​தளத்​தில் வீடியோ ஒன்றை சமீபத்​தில் வெளி​யிட்​டுள்​ளார். அதில், ‘முதலில் காவல்​துறை​யினர் என்னை அசிங்​கப்​படுத்தி வந்​தனர். தற்​போது திமுக​வினர் மேடை போட்டு அசிங்​கப்​படுத்தி வரு​கின்​றனர். நான் புகார் அளித்​தவர்​கள் மீது போலீ​ஸார் இது​வரை விசா​ரணை மேற்​கொள்​ள​வில்​லை.

ஆனால், என்னை தொடர்ந்து விசா​ரிக்​கிறார்​கள். விசா​ரணை என்ற பெயரில் என்னை மன உளைச்​சலுக்கு ஆளாக்கி வரு​கின்​றனர். துணிச்​சலுடன் வெளி​யில் வந்த என்னை குற்​ற​வாளி​போல் சித்​தரித்து கேவலப்​படுத்​துகின்​றனர், ஆளுநரை சந்​திக்க வாய்ப்பு கிடைத்​தால் அனைத்து விவரங்​களை​யும் தெரி​விப்​பேன்’ என கண்​ணீர் மல்க தெரிவித்​துள்​ளார்.