ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள் சொத்து பிரச்சனை காரணமாக மாமனை வெட்டிக்கொன்ற மச்சான்!! பழிக்குப் பழிவாங்க தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன்.ஜோலார்பேட்டையில் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் திம்பராயனுக்கும் நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி ஜோலார்பேட்டை அருகே காந்திநகர் பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தன் மறைத்து வைத்திருந்த அருவாளால் சரமாரியாக மாமனை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்பு ஒன்பது நாட்களுக்கு பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த சக்கரவர்த்தியை மர்ம நபர் நோட்டமிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில, இன்று காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட சக்கரவர்த்தி அவருடைய மனைவி கௌரி ஆகிய இருவரும் செல்ல இருந்த நிலையில் பொன்னேரி பகுதியில் உள்ள அம்மன் கோவில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற அவரது மனைவி கௌரிக்கும் சுண்டு விரலில் வெட்டு விழுந்தது பின்னர் இருவரும் மயங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சக்கரவர்த்திற்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சக்கரவர்த்தியை வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும் இந்த வழக்கில் முதற்கட்டமாக திம்மராயன் மகன் பாரத் (24) மற்றும் அவருடைய நண்பர்களான வெங்கடேசன் (24)
வசந்தகுமார் (23) அக்பர் பாஷா (21)
திப்புசுல்தான் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தந்தையை கொன்றதால் மகன் பழிக்குப் பழி வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சொந்த பந்தங்களே நிலப் பிரச்சனை சம்பந்தமாக மாமனை மச்சான் வெட்டி கொலை செய்ததில் தற்போது பழிக்கு பழி வாங்கும் மாமன் மகன் தற்போது தனது சொந்த மாமனை வெட்டி கொலை செய்த சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 நபர்களை ஜோலார்பேட்டை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்திகளுக்காக திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் ஆனந்தகுமார்
தந்தையைக் கொன்ற கோபத்தில் மாமனை போட்டு தள்ளிய மச்சான்! ஐந்து பேர் கைது.
