500 கோடியில் டான் பிக்ச்சர்ஸ் படங்கள்… தயாரித்தது எப்படி… ED வளையத்திற்குள் சிக்கிய தனுஷ் , சிவகார்த்திகேயன், சிம்பு.!!

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் கரனின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.

டான் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் கரன் நிர்வகித்து வருகிறது. தற்போது நிலைப்படி தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 , அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது டான் பிக்ச்சர்ஸ் .

மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் முத்த மகன் மு.க முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் கரன். விக்னேஷ் சிவன் இயக்கிய தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஆகாஷ் , தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் ஆகிய படங்களிலும் விக்னேஷின் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் 500 கோடி மதிப்பிலான படங்களை தயாரித்து வருகிறார். ஆகாஷ் கரனின் தந்தை சேலத்தின் PRR ஸ்வர்ண மாளிகை என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இதுதவிர்த்து வேலவன் டிரான்ஸ்போர்ட் என்கிற நிறுவனத்தையும் ஆகாஷின் தந்தை நடத்தி வருகிறார். ஆகாஷின் தங்கைக்கும் அமைச்சர் ஒருவரின் உறவினரான வாலாடி கார்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஆகாஷின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத் தக்கது.

பட தயாரிப்பிற்காக சட்டவிரோத பணபரிமாற்றத்தின் ஆகாஷ் கரன் ஈடுபட்டாரா என்கிற சந்தேகம் எழுந்தது. இதனால் அமலாக்கத் துறையினர் ஆகாஷ் கரன் வீட்டில் கடந்த சில நாட்கள் முன்பு சோதனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில் தற்போது நடிகர் தனுஷ் , சிவகார்த்திகேயன் , மற்றும் சிம்பு ஆகிய மூவரின் பெயரையும் விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.