மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி ரூ.2 ஆயிரம்கொள்ளை. இருவர் கைது.

கோவை மே 22 கோவை சவுரிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (வயது 25) ராமநாதபுரத்தில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினர் விக்னேஷ் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு அவருக்கு ஏற்கனவே தெரிந்த டேவிட் ராஜா என்பவர் வந்தார். அவர் அருண்குமாரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்ததால் டேவிட் ராஜா அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அருண்குமார் தனது உறவினருடன் மாரியம்மன் கோவில் அருகே நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த டேவிட் ராஜா அவரது நண்பர் கமலேஷ் ஆகியோர் அருண்குமாரை பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் குத்தினார்கள்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து கணபதியை சேர்ந்த டேவிட் ராஜா, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த கமலேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தார்..இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.