கோவை மே 22 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கோவையில் , வடவள்ளி, சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் பண்ணை வீடுகளை போலீசார் கணக்கெடுத்து வருகிறார்கள். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் தனி வீடுகள் மற்றும்பண்ணை வீடுகள் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் முதியவர்கள் பலர் தனியாக வசித்து வருகிறார்கள் .அது தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது .அதில் 1300 முதியவர்கள் தனியாக வசித்து வருகிறார்கள். அவர்களை “நெய்பர் வுட் போலீஸ் “என்ற திட்ட மூலம் வாரம் ஒரு முறை போலீசார் சந்தித்து பேசி வருகிறார்கள். மேலும் காவலன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் .கோவை மாநகரில் காவலன் செயலியை இதுவரை 25 ஆயிரம்பேர் தங்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளனர். சந்தேக நபர்கள் யாராவது வந்தால் காவலன் செயலியில் எண் எதையும் டைப் செய்து போன் செய்ய வேண்டாம். அந்த செல்போனை 3 முறை அசைத்தாலே உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துவிடும் .இந்த செயலி மூலம் இதுவரை 179 புகார்கள் வந்துள்ளன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இந்த செயலி மிகவும் உபயோகமானது. எனவே மாநகரில் வசிக்கும் அனைவரும் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். கோவையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிறப்பு குழு அமைத்து தனியார் நிறுவனங்கள், மில்களில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது கண்டிப்பாக ஆவணங்கள் வாங்கிக் கொண்டுதான் வடமாநிலத்தினரை வேலைக்கு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் “காவலன் செயலி ” 25 ஆயிரம் பேர் பதிவிறக்கம். போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேட்டி.
