மளிகை கடையை உடைத்து ரூ,1 லட்சம் பணம் – சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

கோவை ஜூன் 23 கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம்,காந்திநகர்,மருத கோனார் வீதியை சேர்ந்தவர் ஜேக்கப் ( வயது 34 )இவர் தடாகம் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையில் முன்பக்க கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த ரு 1 லட்சம் பணம் மற்றும் 10 சிகரெட் பண்டல். ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜேக்கப் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.