கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் புகுந்த காட்டுயானை அங்கு வசித்துவரும் மேரி கணவர் பெயர் தாமஸ் வயது 77 என்பவரின் வீட்டின் பின்புறம் உடைத்துத் தள்ளியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த மேரி மற்றும் அருகில் குடியிருந்த தெய்வானை ஆகியோர் முன் வாசல் வழியாக தப்பிக்க முயன்றுள்ளார் இதில் மூதாட்டியான மேரியை காட்டுயானை தாக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்று போட்டுள்ளது இதனால் சம்பவப்பகுதியிலேயே அவர் உயிரிழந்தார் இந்நிலையில் தெய்வானை வயது 75 என்பவர் அலறியடித்து ஓடியதில் கீழே விழுந்தது காயம் ஏற்பட்டுள்ளது சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்தினர் காட்டுயானையை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர் தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கீழே விழுந்து காயமடைந்த தெய்வானையை வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
வால்பாறை அருகே நள்ளிரவில் காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
