கோவைமே 20 திருப்பூர் மாவட்டம் மங்கலம் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை, ஏ.டி. காலனியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47) விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். மோள காளிபாளையம் பிரிவு. பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் மகேஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி நித்யா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாக மினி லாரி டிரைவர் மாதவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக் -மினி லாரி மோதல் :விசைத்தறி தொழிலாளி பலி.
