கோவை மே 20 கோவை தொண்டாமுத்தூர், தென்னமநல்லூர்அருகே உள்ள சந்தே கவுண்டன்பாளையத்தில் மளிகை கடை நடத்தி வருபவர்சேர்ந்தவர் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் (வயது 39 ) இவரது கடையில் தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நேற்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் ( குட்கா ), 24.5 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளும், அங்கிருந்த வேனும்,பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரகாஷ் என்றஜெயபிரகாஷ் ( வயது 39) குப்பை பாளையம்,டிரைவர் சத்திய பிரகாஷ் (வயது 44) ஜெயப்பிரகாஷ் மனைவி ஜெய சுந்தரி ( வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.ஜெயபிரகாஷ் சத்திய பிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவரது மனைவி ஜெய சுந்தரி நிபந்தனைஜாமினில் அனுப்பப்பட்டார்
24 கிலோ குட்கா பறிமுதல் . வியாபாரி – டிரைவர் கைது.
