ஸ்கூட்டர்மோதிபெண் போலீசின் கணவர் பரிதாப சாவு.

கோவை மே 20 தஞ்சை மாவட்டம் மேலவஸ்த சாவடியில்உள்ள போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் . இவரது மகன் விஜய் ( வயது 37) எம்.பி.ஏ. பட்டதாரி இவர் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டுமான மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று கோவை ஏ .ஜி . புதூர் பக்கம் உள்ள சேலம் – கொச்சின் பைபாஸ்  ரோட்டில் கடைக்குச் செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இவர் மீது மோதியது இதில் விஜய் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இவரது மனைவி ரஞ்சனி தஞ்சை மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.இது குறித்து அவரது மனைவி ரஞ்சனி கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்கூட்டர் ஓட்டி வந்த எஸ் .எஸ் . குளம் குரும்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 24 ) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.