பா.ஜ.க .தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீஸ்ஏட்டுக்கள் பணியிட மாற்றம்.

கோவை மே 19ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி ஊர்வலம்கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ .முன்னாள் மாநில தலைவர்அண்ணாமலை ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் நயினார்நாகேந்திரன் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார் .அதிமுக மாவட்ட நிர்வாகிகள்,பாஜக நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு சின்னசாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு மந்திரம் ஆகியோர் காவலர் சீருடையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ வை சந்தித்து பேசினார்களாம் .இது யடுத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சின்னச்சாமியும் மந்திரமும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களது ஊரைச் சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ என்பதால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தது தெரியவந்தது. பணியின் போது காவலர் சீருடையில் அனுமதி இல்லாமல் பாஜக மாநில தலைவரை சந்தித்ததற்காக ஏட்டுக்கள் சின்னச்சாமி, மந்திரம் 2 பேரையும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (கண்ட்ரோல் ரூம்)பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதேபோல நல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டு நல்லசாமி வழக்கு விசாரணையை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததாக கூறி அவரையும் மாநகர காவல் கட்டுப்பாட்டுஅறைக்கி பணியிட மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.