கோவை மே 19
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று இரவு பீளமேடு சித்ரா பகுதியில் சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் தண்ணீர் பந்தல், வி. கே .ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற தொட்டி ஜெயா ( வயது 25 )நேரு நகர் 2-வது கிராசை சேர்ந்த சபரீசன் ( வயது 20) என்பது தெரியவந்தது.இவர்கள் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களை வரவழைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.