கோவையில்  வங்காளதேச தொழிலாளர்கள் 15 பேர் கைது போலீசார் தீவிர சோதனை

கோவை மே .19

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கிருந்து வேலை செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப் ( வயது 35) அவரது தம்பி லோதிப் அலி ( வயது .29 )ஆகியோரை போலீசார் கைது செய்தனர் .தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் சட்ட விரோதமாக வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார் களா? என்பது குறித்து தீவிரசோதனை நடத்தினார்கள். அதில் கோவை வீரியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து வேலை செய்து வந்த பாபு ( 26)சமீர்  (19 )அல் அமீன் 24 முகமது அல்தாப் ( 45) அராபத் (22 )உட்பட 15 பேர் எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருந்து வேலை செய்து கண்டுபிடிக்கப்பட்டதுஇதையடுத்து பீளமேடு  போலீசார் அந்த 13 பேரையும் கைது செய்தனர். கோவையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வங்காளதேச வாலிபர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும்.சோதனையை தீவிர படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியும், தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தியும் வருகின்றனர்.இதுகுறித்துபோலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து வந்தவர்கள் யார்? எந்த ஆவணங்களை வைத்து நிறுவனம் மற்றும் மில்லில் வேலைக்கு சேர்ந்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர கோவை மாநகர பகுதி மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ்  .வங்காளதேசத்தைசேர்ந்தவர்கள் வேலைக்கு சேருகிறார்களா? என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வங்காளதேசம் அதை ஒட்டி உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு சேரும்போது அவர்கள் குறித்த தகவலை காவல்துறைக்குதெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது அது போன்று வ.டமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யார்? வேலைக்கு சேர்ந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு சேர்க்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மற்றும் தனியார் மில்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.