கோவை மே 19
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, போஸ்டல் காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி ( வயது 53 )விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பழனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பெத்தநாயக்கனூரில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் நேற்று போஸ்டல் காலனியில் உள்ள வீட்டுக்கு முத்துக்குமாரசாமி தனது குடும்பத்துடன் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று .பார்த்த போது படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.பீரோவில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.