ஐ. டி. இன்ஜினியரிடம் ரூ.6.80லட்சம் ஆன்லைன் மோசடி. 3 பேர் கைது.

கோவை மே 17கோவை கணபதி,ஜெம் நகரை சேர்ந்தவர் 30 வயது வாலிபர்.இவர்அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.பகுதி நேர வேலையும் தேடிக் கொண்டிருந்தார்.இந்த நிலையில்இவரது செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதிகுறுஞ்செய்தி வந்தது அதில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது அதை நம்பி அவர் ரூ 6 லட்சத்து 80 ஆயிரம் முதலீடு செய்தார் .ஆனால் அவருக்கு லாபம்எதுவும் வரவில்லை. மற்றும் முதலீடு பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் திருச்சூர் பெரின்கோட்டு கராவை சேர்ந்த டி.எஸ்..விஷ்ணு ( வயது 28),கட்டில பூவம் |டி.எஸ்.விஷ்ணு ( வயது 28)ஆனந்து கிருஷ்ணா ( வயது 20)ஆகியோரை கைது செய்தார்.இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.