கோவை மே 17 கோவை காந்திபுரம் 100 அடி ரோடு, 3 -வது வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திவ்யா ( வயது 28)இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒருதனியார்மருத்துவமனையில் நர்சாகவேலை பார்த்து வருகிறார். கடத்த 15-ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் “சுவிட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரதுதாயார் அஞ்சலைஅம்மாள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மருத்துவமனைக்கு சென்ற நர்ஸ் திடீர் மாயம்.
