கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 118 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 32, ஆயிரத்து492 ஆக அதிகரித்தது. நேற்று கோவை மாவட்டத்தில் 145 பேர் கொரோனா பாதிப்பு இருந்து குணமடைந்தனர். இதனால் இதுவரை 3, லட்சத்து 28, ஆயிரத்து 965 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 910 ஆக உள்ளது..உயிர் இழப்பு எதுவும் இல்லை.