காட்டெருமைக்கு உணவு வழங்கிய இருவருக்கு 10,000 அபராதம் – வனத்துறை அதிரடி.!!

கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டு மாடுகள் அதிகரித்துள்ளன. இவை பகல் நேரங்களிலேயே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆபத்து உணராமல் காட்டு மாடுகளுக்கு உணவுகளை பரிமாறுகின்றனர். இதனால் மனித மற்றும் மாடு மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில், கொடைக்கானல் அருகே காட்டெருமைக்கு உணவு வழங்கிய 2 பேருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதித்த வனத்துறையினர், வன விலங்குகளுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.